<<>>டாக்டர் துவாரகாநாத் கோட்னிஸ்<<>>
டாக்டர் கோட்னிஸ்
கோட்னிஸ் சகோதரிகள்
மனோரமா, வத்சலா
"ஒரு நல்ல வீரன் -
ஒரு நல்ல நண்பன்" - மாவோ...!
நமது வீட்டின் அருகிலுள்ள மனிதர்களுக்கு
நேர்கிற துன்பத்தைக் குறித்தும் கவலைகொள்ள
இயலாத வாழ்க்கை நம்முடையதாகத் தொடர்கிறது
நமது வீட்டின் அருகிலுள்ள மனிதர்களுக்கு
நேர்கிற துன்பத்தைக் குறித்தும் கவலைகொள்ள
இயலாத வாழ்க்கை நம்முடையதாகத் தொடர்கிறது
இன்று; ஆயினும் எல்லாக்காலத்திலும்
அதிசயிக்கத்தக்க விதமாகத் தன்னைச்
சுற்றியுள்ள, வெகுதொலைவிலுள்ள
மனிதர்களின் நலனிலும் அக்கறை
கொள்கிற ஆளுமைகள் தோன்றிக்
கொண்டிருக்கின்றன. அந்தவகையில்
உலகம் தழுவிய நேசத்தினால்
தன்னை உயர்த்திக் கொண்ட
மிகச்சிறந்த ஆளுமைதான்
டாக்டர் துவாரகாநாத் கோட்னிஸ்
(துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்
என்பது முழுப்பெயர்).
1910, அக்டோபர் 9-ல் அந்நாளைய பம்பாய்
மாநிலம் ஷோலாப்பூரில் கோட்னிஸ் பிறந்தார்.
பனிரெண்டு குழந்தைகளைப் பெற்ற தாய்-தந்தை
யருக்கு கோட்னிஸ் ஒரு குழந்தை. அவர் ஆரம்பப்
அதிசயிக்கத்தக்க விதமாகத் தன்னைச்
சுற்றியுள்ள, வெகுதொலைவிலுள்ள
மனிதர்களின் நலனிலும் அக்கறை
கொள்கிற ஆளுமைகள் தோன்றிக்
கொண்டிருக்கின்றன. அந்தவகையில்
உலகம் தழுவிய நேசத்தினால்
தன்னை உயர்த்திக் கொண்ட
மிகச்சிறந்த ஆளுமைதான்
டாக்டர் துவாரகாநாத் கோட்னிஸ்
(துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்
என்பது முழுப்பெயர்).
1910, அக்டோபர் 9-ல் அந்நாளைய பம்பாய்
மாநிலம் ஷோலாப்பூரில் கோட்னிஸ் பிறந்தார்.
பனிரெண்டு குழந்தைகளைப் பெற்ற தாய்-தந்தை
யருக்கு கோட்னிஸ் ஒரு குழந்தை. அவர் ஆரம்பப்
பள்ளிப்படிப்பை முடித்த காலத்தில் அப்பகுதியில்
பெரும் கொள்ளை நோயொன்று ("ஸ்பானிஷ் புளு')
பரவி கிராமங்களில் சாவு எண்ணிக்கை அதிகரித்தவாறு
பெரும் கொள்ளை நோயொன்று ("ஸ்பானிஷ் புளு')
பரவி கிராமங்களில் சாவு எண்ணிக்கை அதிகரித்தவாறு
இருந்தது.
கோட்னிஸ் இத் துயரம் கண்டு மனம் நொந்தார்.
அக்காலத்தில் ஜப்பானியர்கள் மத்தியில் மிகவும்
கோட்னிஸ் இத் துயரம் கண்டு மனம் நொந்தார்.
அக்காலத்தில் ஜப்பானியர்கள் மத்தியில் மிகவும்
பிரபலமாக இருந்த "மெய்ஜி பாதுகாப்புத்திட்டம்'
என்பது குறித்து இந்தியாவிலிருந்த சமூக
என்பது குறித்து இந்தியாவிலிருந்த சமூக
அக்கறையாளர்கள் மத்தியிலும் வெகுவாகப்
பேசப்பட்டது. "வலிமையான மக்கள், வலிமையான
தேசம்' என்பதுதான் அத்திட்டத்தின் உட்பொருள்.
எனவே தன் நாட்டு மக்களும் வலிமை
மிக்கவர்களாக உருவாக வேண்டுமெனக்
கருதி தனது உயர் கல்விக்கு மருத்துவத்
துறையைத் தேர்வு செய்தார் கோட்னிஸ்.
1936ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வியை
முடித்த கோட்னிஸ், தனது துறைசார்ந்த
புலமையினால் தான் படித்த மருத்துவக்
கல்லூரியிலேயே பயிற்சியாளராகவும்
பேசப்பட்டது. "வலிமையான மக்கள், வலிமையான
தேசம்' என்பதுதான் அத்திட்டத்தின் உட்பொருள்.
எனவே தன் நாட்டு மக்களும் வலிமை
மிக்கவர்களாக உருவாக வேண்டுமெனக்
கருதி தனது உயர் கல்விக்கு மருத்துவத்
துறையைத் தேர்வு செய்தார் கோட்னிஸ்.
1936ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வியை
முடித்த கோட்னிஸ், தனது துறைசார்ந்த
புலமையினால் தான் படித்த மருத்துவக்
கல்லூரியிலேயே பயிற்சியாளராகவும்
ஓராண்டு முடிந்ததும் அக்
கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில்
மருத்துவராகவும் பணிபுரிந்தார்.
1940களில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
சீன மக்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
அந்நாட்களில் சீனத்திற்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் நாடு முழுவதும் பரவியிருந்தது.
இச்சூழ்நிலையில் பாஸிஸத்துக்கு எதிரான
ஸ்பெயின் நாட்டு மக்களின் போர்க்களத்தில்
சேவை செய்துவிட்டுத் திரும்பியிருந்த டாக்டர்
அடல், போர்க்களத்தில் காயமுற்ற சீனப் போர்
வீரர்களுக்கு மருத்துவ சேவை புரிவதற்காக
மருத்துவர் அணி ஒன்றை உருவாக்க காங்கிரஸ்
கட்சியின் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதனை அறிந்த டாக்டர் கோட்னிஸ் தன்னையும்
அந்த அணியில் இணைத்துக் கொள்ள வேண்டு
மெனக் கோரி, மிகச்சிறந்த அனுபவமுள்ள ஐவர்
கொண்ட மருத்துவர் அணியில் இணைந்தார்.
1938, செப்டம்பர் முதல் தேதி பம்பாயிலிருந்து
புறப்பட்ட "எஸ்.எஸ். ராஜபுதனா' என்ற ஆங்கில
தபால் கப்பலில் இந்த மருத்துவர்குழு சீனாவுக்குப் புறப்பட்டது.
அக்டோபர் 7-ந் தேதி இக் குழு, சீன ராணுவக்
கமிட்டியின் உதவித் தலைவராக இருந்த தோழர்
சூ என்லாயைச் சந்தித்தது. யேனான் படைத்தளத்தில் மருத்துவ சேவை செய்யும் தன் விருப்பத்தைத் தெரிவித்தது.
"மிக்க நன்றி. கோமின் டாங் பகுதியில் சிறிது
காலம் பணிபுரிந்து விட்டுப் பின் யேனான்
செல்லலாம், ஏற்பாடு செய்கிறேன்' என்றார்
சூ என்லாய்.
1939 ஜனவரி 22-ல் இந்த மருத்துவரணி தாகூரின் பாடலொன்றை இசைத்தபடி யேனான் புறப்பட்டுச் சென்றது. யேனான் சென்றடைந்த வாரத்திலேயே
தோழர் மாவோவைச் சந்தித்தனர்.
செப்டம்பர் 23-ல் இந்திய மருத்துவர் குழுவுடன் சிறிது நேரத்தைச் செலவிடவும் அவர்களுடன் இரவு உணவு உண்ணவும் விரும்புவதாக மாவோ செய்தியனுப்பினார். ஆர்வ மேலீட்டால் தம் குழுவினர் புறப்படும் முன்னே டாக்டர் கோட்னிஸ் மாவோவின் இருப்பிடத்திற்குச் சென்று விட்டார்.
தன் எழுத்து மேசையின் முன் அமர்ந்திருந்த மாவோ எழுந்து வந்து அன்புடன் வரவேற்றார். மாவோவின் எளிமையான வாழ்க்கை முறை கண்டு வியந்தார் கோட்னிஸ். பணிகளில் இடர்ப்பாடு ஏதும் இருக்கிறதா... உங்களுக்கு என்னிடம் சொல்ல வேண்டியதென
செய்திகள் ஏதும் உண்டா எனக் கேட்டு அறிந்து
கொண்ட மாவோ, கோட்னிஸின் குடும்பம், இந்தியத் தொழிலாளர்நிலை பற்றியும் விரிவாகக் கேட்டறிந்தார்.
சீனாவுக்குச் செல்லும் வழியிலேயே சீனமொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தார் கோட்னிஸ். படைவீரர்களுக்கு மட்டுமன்றி ஓய்வாக இருந்த
காலத்தில் அப் பகுதி மக்களுக்கும் சிகிச்சை அளித்து உதவுவதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார் அவர்.
சீனமொழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துமளவுக்கு மொழித் தேர்ச்சி பெற்றார்.
ஷாங்ஸி - சாஹர் - ஹீபே பகுதி ராணுவ
மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப்
பணிபுரிந்தார்.
வசதிக்குறைவான துணைக்கருவிகள், உட்
கட்டுமான அமைப்புகளுடன் இயங்கிய
இம் மருத்துவமனையில் டாக்டர் கோட்னிஸ்
ஆற்றிய பணிகள் மிகச் சிறப்பானவை. தன்
பணியின் மீது அவருக்கிருந்த மதிப்பும் பொறுப்புணர்ச்சியும் சிறிது காலத்திலேயே
"நார்மன் பெத்யூன் சர்வதேச அமைதி
மருத்துவமனை' என்ற உயர்நிலை எய்தியிருந்த
அந்த மருத்துவமனையின் முதல் தலைவராக
அவரை உயர்த்தியது.
சீனமக்களின்பால் அவர் கொண்டிருந்த அன்பும்
மதிப்பும் அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்
துணையாக சீனப் பெண்ணான குவோவைத்
தந்தது.
இளமையின் வீரியம் மிக்க தனது 32-வது
வயதில் இடைவிடாத பணிகள்; உடற்
சோர்வினையும் தனது நோயினையும்
கணக்கில்கொள்ளாத உழைப்பு; அன்பும்,
தோழமையும் கொண்ட ஒரு மருத்துவரை
சீன மக்கள் 1942 டிசம்பர் 8-ந் தேதியன்று
இழந்துவிட்டனர்.
இரங்கல் செய்தியில் மாவோ,
"டாக்டர்.கோட்னிஸ்"
நீண்ட தூரத்திலிருந்து சீனாவுக்கு வந்தார்.
யேனானிலும் வடக்கு சீனாவிலும் போரில்
காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சையளித்து
நம்முடன் பணிபுரிந்தார்; சீன ராணுவம்
ஒரு நல்ல வீரனையும் சீன நாடு ஒரு
நல்ல நண்பரையும் இழந்துவிட்டன' என்றார்.
கோட்னிஸ் பணிபுரிந்த மருத்துவமனையில்,
நினைவு இல்லத்தை சீன அரசாங்கம்
கட்டியிருக்கிறது. அண்மையில் இந்தியா வந்த
சீன அதிபர் ஹூ ஜின்டாவ், பம்பாயில் கோட்னிஸ் சகோதரி மனோரமா மற்றும் உறவினர்களைச்
சந்தித்து நன்றி கூறினார்.